சாதியக் கொடுமைகளுக்கு காரணமே பிராமணர்கள்தான்.. பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 7:21 pm

சாதியக் கொடுமைகளுக்கு காரணமே பிராமணர்கள்தான்.. பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு என்று அவர் பேசியிருந்தார்.

சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை என்று பேசியுள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!