பிஞ்சு போன செருப்பா..? வேணாம், எங்களுக்கும் பேச தெரியும்..? அண்ணாமலைக்கு கனிமொழி எச்சரிக்கை..!!!
Author: Babu Lakshmanan2 April 2024, 9:37 am
அண்ணாமலை அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்ச்சிக்க விரும்பவில்லை என்றும், எங்கள் தரத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளப்போவதில்லை என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தாரகை கத்பட்டை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அண்ணா சிலை பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க: சின்னத்தால் வந்த சிக்கல்… திண்டுக்கல் லியோனியால் அதிர்ந்து போன திமுக தொண்டர்கள்… பிரச்சாரத்தில் சலசலப்பு..
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், திமுக மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கூறியதாவது :- இந்தத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலும், தேவை இல்லாமல் ஒரு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தேவையான ஒரு வேட்பாளரோடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக விஜய் வசந்த் அவர்கள் இங்கே கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதே போல விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாரகை கத்பட் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
உங்களுக்கு அதிகமாகத் தாரகை பற்றிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தாரகை பல வருடங்களாகத் தெரியும். எப்பொழுதும் மென்மையாகப் பேசக் கூடியவராக இருந்தாலும் ஒரு போராட்டம் என்றால் முதலிலே களத்தில் நிற்கக்கூடிய ஒரு சகோதரி தான் தாரகை. நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து உங்களுடைய பிரச்சனைகளை முன்னின்றி தீர்க்கக்கூடிய ஒருவர் தான் தாரகை.
சில பேர் இந்த பக்கமே வர மாட்டார்கள், முன்னாடி இருந்த சட்டமன்ற உறுப்பினர், ஆனால் என்னமோ நெனச்சு காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றார்கள், ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், எல்லோருக்கும் ஒரு நன்மை நடந்திருக்கிறது. அது எங்கள் தாரகை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இங்கே இருக்கக் கூடிய அடித்தட்டு மக்கள், இங்க இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் குரலாகவும் நம்முடைய சட்டமன்றத்தில் அவர் ஒலிப்பார் என்ற நம்பிக்கையோடு உங்களுடைய பொன்னான வாக்குகளைத் தாரகை அவர்களுக்கு கை சின்னத்தில் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், நம்முடைய விஜய் வசந்த், அவருடைய தந்தையார் இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுடன் பணியாற்றிய ஒருவர். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களுடைய குரலாக இயக்கக் கூடியவர். அதே வழியிலே இன்று தம்பி விஜய் வசந்த் அவர்கள் தொடர்ந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே ஒரு புன்னகை பூத்த முகத்தோடு, மக்களை நிதானமாக செயல்படக்கூடிய ஒரு சிறந்த மக்களவை உறுப்பினர். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!
இந்தத் தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். ஏனென்றால் இந்த தேர்தலில் நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் ஒரு பெரிய விபத்து நடந்து, மறுபடியும் பாஜக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும், அதன் பிறகு நாம் ஓட்டு கேட்கப் போக முடிந்த, ஓட்டுப் போடவும் முடியாது. ஒரு ஆட்சி சர்வாதிகார ஆட்சி ஒருவரையே சுற்றி இருக்கக் கூடிய ஆட்சி. ஒரு கட்சியின் ஆட்சி அதுதான் நிரந்தரம் என்று மாறிவிடும், ஜனநாயகம் இருக்காது, எனக் கூறினார்.
இதனிடையே, ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துக்கும் வழி விடச் சொன்னார் கனிமொழி. தொடர்ந்து பேசிய கனிமொழி, இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல், சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, நம் ஒருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.
தொடர்ந்து மதத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு நாங்கள்தான் அரணாக இருக்கிறோம் என்று இந்து மதத்தை நாங்கள் தான் காப்பாற்றினோம் என்று சொல்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ காலமாக இருக்கக்கூடிய மதத்தை ஒரு கட்சி தான் வந்து காப்பாத்தணுமா? எந்த மதத்தையும் எந்த கட்சியும் வந்து காப்பாற்ற அவசியம் இல்லை. மதத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மக்களுடைய நம்பிக்கை. அதனால் இந்து மதத்தை, இந்து மக்களை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு மதத்தின் மீதும், பெரும்பான்மை மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.
பெரும்பான்மை மக்கள் மீது அக்கறை இருந்தால், சொன்னது போல் இந்து மாணவர்களுக்கு எல்லாம் உதவித்தொகை கொடுப்போம் என்று சொன்னார்கள், வந்ததா? ஒன்றும் வரவில்லை. அதேபோல் பெரும்பான்மை மக்களுக்காக 15 லட்சம் வங்கியில் போடுவதாகச் சொன்னார்கள், வந்ததா? இப்படி பெரும்பான்மையே இருக்கக்கூடிய மீனவர்களுக்கு எதிரான சட்டங்கள், பெருமை இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டங்கள் சட்டங்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய பாஜக பெரும்பான்மை மக்களுக்கு காப்பாற்ற ஏதாவது செய்திருக்கிறார்களா, இல்லை? 44 பாஜக எம்பிக்கள் பெண்கள் மீதான குற்றங்களைச் செய்து, அதன்படி அவர்கள் மேல் வழக்கு இருக்கிறது, நாடாளுமன்றத்திலே இன்றும் இருக்கிறார்கள்.
இதுதான் நீங்கள் பெண்களைக் கடவுளை மறக்கக்கூடிய வழியா? இப்படித்தான் பெண்களை மதிக்கிறீர்களா. மணிப்பூர், நான் சென்று அங்கே இருக்கக்கூடிய நிலையைப் பார்த்தேன். அத்தனை மக்களும் அங்கே முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் பால் இல்லை, வயதானவர்களுக்கு மருந்து மாத்திரை இல்லை, அடிப்படைத் தேவைகள் இல்லை, சாப்பாடு இல்லை, தண்ணீர் இல்லை. ஆனால் அப்படி இருக்கும் நிலையிலும், இரண்டு சகோதரிகளுக்கு, ஆயிரம் பேருக்கு மேல அவர்களை அசிங்கப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்திச் சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளைச் செய்தார்கள். இன்றைக்கு வரைக்கும் உலகம் பூரா சுற்றுகிற மோடி அவர்களால் மணிப்பூர் சென்று அந்தப் பெண்களையோ, முகாம்களில் இருக்கக்கூடிய மக்களைப் பார்க்க மனதில்லை.
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது பார்க்கவில்லை, தேர்தல் வந்தவுடன் வாரத்திற்கு நான்கு முறை, ஐந்து முறை அடிக்கடி மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்காக வருகிறார். ஆனால் மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா நிவாரணம் கொடுக்கவில்லை. இதுவரைக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள், இந்துக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை. உண்மையிலேயே பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை என்று பாகுபாடு பார்க்காமல் அத்தனை பேருக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது பார்க்கவில்லை, தேர்தல் வந்தவுடன் வாரத்திற்கு நான்கு முறை, ஐந்து முறை அடிக்கடி மக்களிடம் வந்து வாக்கு கேட்பதற்காக வருகிறார். ஆனால் மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா நிவாரணம் கொடுக்கவில்லை இதுவரைக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களும் இருக்கிறார்கள், இந்துக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா இல்லை. உண்மையிலேயே பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை என்று பாகுபாடு பார்க்காமல் அத்தனை பேருக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
100 நாள் வேலைத் திட்டம், சோனியா காந்தி அவர்கள் வலியுறுத்தி UPA அரசாங்கத்தால் திமுக அங்கம் வகித்துக் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்களுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் வருடம் வருடம் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறது. நான் கூட பட்ஜெட்டில் பேசும்போது கேட்டேன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி குறைத்துக் கொண்டே வருகிறீர்களே, எப்படி வேலை கொடுப்பீர்கள் என்று கேட்டேன்? தேவை ஏற்படும் போது நாங்கள் அதை ஏத்திக் கொடுப்போம் என்று சொன்னார்கள். அப்போது விஜய் வசந்த் அங்கே இருந்தார், ஆனால் அதிகரிக்கவே இல்லை.
நாடு முழுவதும் யாருக்குமே 100 நாள் வேலை கிடையாது. 20 நாள் 30 நாள் கிடைத்தாலே பெரிது விஷயம். அந்த நாளுக்கும் சம்பளம் சரியாக வருவதில்லை. ஆறு மாதங்கள், நான்கு மாதமாகச் சம்பளம் வருவதில்லை. நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன், நம்முடைய ஆட்சி அங்கே இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன், 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் 400 ரூபாய், அதை திமுக மட்டும் சொல்லவில்லை, அதைக் காங்கிரசும் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். அதேபோல, காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் இருப்பதைப்போல், தேர்தல் முடிந்த பிறகு நாடு முழுவதும் பிள்ளைகள் பயன்படக்கூடிய வழிகளில், உத்தரப் பிரதேசத்தில் இருக்கக் கூடிய பிள்ளைகளுக்குக் கண்டிப்பாக, திராவிடம் மாடல் அரசு திட்டத்தை நீட்டிக்கப்படும்.
திடிரென்று பிரதமருக்கு தமிழ் மீது ஆசை வந்துவிட்டது, எத்தனை நாட்களாக நம்மை இந்தி படி, இந்தி படி என்று சொல்வார்கள். ஆனால் இப்போது எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள், எங்களை இந்தி படிக்க சொல்கிறீர்கள், நீங்களும் தமிழ் படிங்க யார் வேண்டாம் என்று சொல்வார்கள். நாங்களே ஒரு வாத்தியாரை அனுப்புகிறோம். நீங்கள் தமிழ் படியுங்கள் யார் வேண்டாம், என்றார்கள்.
அண்ணாமலை தமிழ் சொல்லித் தர மாட்டார், அவர் கர்நாடகாவில் வேலை செய்யும்போது, நான் கன்னடக்காரன் என்னைத் தமிழன் என்று சொல்லாதீர்கள். நான் பெருமையாகச் சொல்லுவேன் கன்னடக்காரன் என்று. அண்ணாமலை இப்பொழுது தேர்தல் நேரத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மக்கள் உயிர்நீத்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அது பிஞ்சு போன செருப்பு என்று அண்ணாமலை சொல்கிறார் என்றால் அதே வழியில் எனக்கும் பதில் சொல்லத் தெரியும். ஆனால் உனக்கு அந்த தரம் இல்லை என்று விட்டுவிடுகிறேன். தேர்தல் நேரத்தில் எங்கள் மக்கள் உங்களுக்குச் சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள், என்று பேசினார்.