சேலம் கடை வீதியில் வாக்குசேகரித்த இபிஎஸ்… கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய வியாபாரிகளை கண்டு நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 9:49 am

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் கடை வீதி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் நடந்த சாலையோர வியாபாரிகளை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுக வேட்பாளர் விக்னேஷ் என்பவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: அப்போ நாங்க மட்டும் இளிச்சவாயனுகளா? பிரச்சாரத்தில் பொங்கி எழுந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தொடர்ந்து வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள், சாலையோர வியாபாரிகள் சால்வை மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் சாதனைகளை பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களையும் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது செய்யப்பட்ட சாதனைகளையும் எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: அரைத்த மாவையே அரைக்கும் உதயநிதி : பேச விஷயம் இல்லாமல் பிரச்சாரத்தில் திணறும் திமுக!!

சேலம் கடை வீதியில் நடந்த சென்று சாலையோர வியாபாரிகள் கடை வியாபாரிகள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக, தேமுதிக, அம்பேத்கர் மக்கள் இயக்கம், குடியரசு கட்சி, புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக், புதிய தமிழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!