‘இப்படி எல்லாமா ஓட்டு கேட்பாங்க’… வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்… வியந்து பார்த்த பொதுமக்கள்…!!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 12:38 pm

ராமேஸ்வரத்தில் வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளரை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாரிராஜன் என்பவர் வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் உரலும், உலக்கையும் என்ற சின்னத்தை வழங்கி உள்ளனர்.

மேலும் படிக்க: ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி… கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி : CM ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

இந்த நிலையில் தங்களுடைய பாரம்பரிய தொழிலான முடி திருத்தம் செய்யும் தொழிலை செய்து வந்தும், அந்த சமுதாயத்தின் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டுள்ளதால், வாக்காளர்களுக்கு முடி திருத்தம் செய்து வாக்குகளை தீவிரமாக சேகரித்து வருகின்றார்.

மேலும் படிக்க: கூட்டணிக்காக அச்சுறுத்திய பாஜக.. ஜெயலலிதா போல துணிந்து எடுத்த முடிவு ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!!

மேலும், தற்போது உள்ள காலகட்டத்தில் வேட்பாளர்கள் அனைவரும் சொகுசு வாகனத்தில் வாக்கு சேகரிக்க சென்று வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர் பாரிராஜன் என்பவர் சைக்கிள் சென்று ஒவ்வொரு கடை மற்றும் தெருக்களில் வாக்கு சேகரித்து வருவதை வாக்காளர்கள் வியந்து பார்வையிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்