24 தமிழக மீனவர்கள் விடுதலை… படகை ஓட்டியவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை ; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
4 April 2024, 3:52 pm

ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒரு படகோட்டிகளுக்கு ஆறு மாத சிறை தண்டனை ; இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: ரூ.12 லட்சம் கோடி ஊழல்… வேட்டி முதல் குண்டூசி வரை அனைத்திலும் முறைகேடு… திமுக கூட்டணி மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

மீன்பிடித்து கொண்டு இருந்த மூன்று விசைப்படகையும், அதில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்து சிறையில் அடைத்தது.

மேலும் படிக்க: தேர்தலுக்குப் பிறகு மோடி சும்மா தான் இருப்பார்… நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பார் முதலமைச்சர்; கனிமொழி கிண்டல்!!

இந்த நிலையில், மீனவர்களின் சிறை காவல் முடிந்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 24 பேரை மட்டும் விடுதலை செய்து ஒரு படகோட்டிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 320

    0

    0