கர்நாடகத்தில் இருக்கும் போது நான் தமிழன் இல்லை என கூறுபவர் அண்ணாமலை.. DMK MP கனிமொழி அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 8:52 pm

கர்நாடகத்தில் இருக்கும் போது நான் தமிழன் இல்லை என கூறுபவர் அண்ணாமலை.. DMK MP கனிமொழி அட்டாக்!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் எம்பியை ஆதரித்து விருதுநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்.பி நடைபெற உள்ள தேர்தல் அனைத்து தேர்தலையும் போல் இந்த தேர்தல் இல்லை.

இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் போன்றது. பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தால் இந்தியாவில் நடக்கின்ற கடைசி தேர்தல் இந்த தேர்தல் தான். இதன் பின்னர் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும் என்றார்.

பாராளுமன்றத்தில் மக்களுக்காக மாணிக்க தாகூர் எம்பி கேள்வி எழுப்பிய போது பலமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேள்வி கேட்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை தூக்கி வெளியே போடக்கூடிய அரசு தான் மோடி அரசு.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது இந்த பாஜக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக அரசால் தொடர்ந்து சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் என யாத்திரை செல்வார், ஆனால் கர்நாடகத்தில் இருக்கும் போது நான் தமிழன் கிடையாது. கர்நாடகக்காரன் என்பார்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் எதற்கு தமிழ்நாட்டில் வந்து தேர்தலில் நிற்கிறார்? நாங்கள் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற வார்த்தையை தமிழகம் மற்றும் தமிழ்நாடு என்று கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அருகதை இருக்கிறது?

தமிழ்நாட்டின் உரிமைகளையும், நிதியையும் பறித்துக் கொண்ட பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வராது. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும், எந்த நிவாரணமும் வராது.

இந்தி மொழியை, தேசிய மொழி என கூறிக்கொண்டு நம் மீது திணித்த பிரதமருக்கு தேர்தல் வந்தவுடன் பிரதமருக்கு தமிழ் மீது பற்று வந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி free-யாக இருப்பார் அப்போது தமிழக முதல்வர் அவருக்கு நல்ல தமிழ் ஆசிரியர் அனுப்பி வைத்து தமிழ் கற்றுக் கொடுப்பார். தமிழ் கற்றுக் கொண்ட பிறகாவது தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 229

    0

    0