பிரபல நடிகர் பாஜகவில் ஐக்கியம்? காட்டுத்தீ போல பரவிய தகவல் : ஒரே வார்த்தையில் அவரே போட்ட X பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 10:07 pm

பிரபல நடிகர் பாஜகவில் ஐக்கியம்? காட்டுத்தீ போல பரவிய தகவல் : ஒரே வார்த்தையில் அவரே போட்ட X பதிவு!

நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதவராக பல கருத்துகளை பேசியும் வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என பதிவிட்டுள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…