நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 3:43 pm

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வகம் என்கிற தனியார் அமைப்பு தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் கூறியதாவது :- மக்கள் ஆய்வகத்தில் முறையான பயிற்சி பெற்ற 18 ஆய்வு நெறியாளர்களும், 85 கள தகவல்கள் சேகரிப்பாளர்களும், மார்ச் 25 முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தின் 39 தொகுதிகளில் 4,485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி… பிரச்சாரத்தின் போது ஆறுதல் கூறிய பொதுமக்கள்..!!

இதில் திமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளும், அதிமுக 24 சதவீதமும், பாஜக 17 மற்றும் நாம் தமிழர் 12.8 சதவீத வாக்குகளை பெறும் என கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். அதே போன்று திமுக கூட்டணி அதிகபட்சம் 37 தொகுதிகளிலும் அதிமுக,பாஜக கூட்டணி தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: என்னையும் தான் அப்படி சொன்னாங்க… நான் ஒன்னும் அண்ணாமலையை பற்றி பேசலையே ; செல்லூர் ராஜு விளக்கம்..!!

மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் திமுக ஆட்சியமைக்க 31.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அதிமுகவுக்கு 21.5சதவீதம் பேரும், பாஜகவுக்கு 10.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 16.2 சதவீதம் பேரும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பகவும் கூறியுள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 281

    0

    0