ரியல் எஸ்டேட்டில் கொட்டும் பணம்.. சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் ராஷ்மிகாவின் Net Worth..!
Author: Vignesh5 April 2024, 4:56 pm
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
மேலும் படிக்க: தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அண்மையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்து டெல்லி போலீசார் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து துரித விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க: டபுள் மீனிங் படங்கள்.. இது தப்பாச்சே.. சென்சார் போர்டை அதிர வைத்த காட்சிகள்..!
மேலும், தற்போது புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 50 கோடி வரை இருக்குமாம். மேலும், இவர் ஒரு படத்திற்கு கதாநாயகியாக நடிக்க நாலு கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ரியல் எஸ்டேட்டிலும் இவருக்கு அதிகப்படியான வருமானம் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.