காசுக்காக எங்க வேணாலும் போவேன்’னு சொன்னாங்க.. உண்மையை உடைத்த CWC பவித்ரா..!
Author: Vignesh5 April 2024, 6:52 pm
விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.
சீசன் 2 நிகழ்ச்சி ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். மக்கள் அவர்களின் ஆசைப்படி இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.
இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரண்மனை போல இருக்கே.. ஹைதராபாத்தில் 3-வது வீடு வாங்கிய நடிகை ராஷி கண்ணா..!
மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவி.
இந்நிலையில் பவித்ரா தன் வாழக்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் பவித்ரா, ” தன்னுடைய சிறுவயதிலிருந்து தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தன்னுடைய அம்மாவிற்கு இந்த விஷயம் பிடிக்காது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நிறைமாத கர்ப்பிணியான அமலா பால்.. எளிமையாக நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்..!..!
மேலும், “அம்மா தன்னை எப்போதும் நன்றாக படிக்க சொல்லுவார் என்றும், தானும் அம்மா படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நன்றாக படிக்க தொடங்கியதாகவும், தான் சென்னைக்கு வந்த பிறகு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, அப்போது முகம் மற்றும் கால்கள் மோசமாக அடிபட்டு இருந்தது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “தன்னுடைய முகத்தில் ஆபரேஷன் நடந்து முடிந்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்க கூட பிடிக்கவில்லை என்றும், இந்த விபத்து குறித்து தன்னுடைய அம்மாவிடம் ஆரம்பத்தில் கூறவில்லை” என பவித்ரா உருக்கமாக தெரிவித்துள்ளார் .
மேலும், கிராமங்களில் உள்ள நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு சம்பளம் காரணமல்ல. எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா என்பதினாலே தான் ஆரம்ப காலகட்டத்தில் அப்படி சென்றதாகவும், ஆனால் சிலர் அதை காசு கொடுத்தால் நீ என்ன வேணாலும் பண்ணுவியா காசுக்காக எங்க கூப்பிட்டாலும் போவியா என்றெல்லாம் கேட்டார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நிகழ்ச்சியில் அவ்வளவு காசு எல்லாம் கிடைக்காது. எட்டு மணி நேரம் நடனம் ஆடினால் தங்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டு, அந்த சம்பளத்தை தாண்டியும் அதில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அதை செய்ததாக தெரிவித்துள்ளார்.