சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார்.. முத்தரசன் கடும் விமர்சனம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 11:27 am

சிவாஜி உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார்.. முத்தரசன் கடும் விமர்சனம்..!!!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், இந்த தேர்தல் பாசிசத்திற்கு எதிரான தேர்தல், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல், அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி தந்துள்ள அமைப்புகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தேர்தல்,

10 ஆண்டுகளாக பேசாத மோடி இப்போ ஏன் பேசுகிறார். 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆச்சு என்று கேட்டால் கச்சத்தீவு என்கிறார். 15 லட்சம் ரூபாய் என்ன ஆச்சு என கேட்டால் கச்சத்தீவு என்கிறார்.

வெள்ள நிவாரண நிதி எங்கே என கேட்டால் கச்சத்தீவு என்கிறார். இது போல ஒரு பிரதமரை பார்த்ததில்லை என தெரிவித்தார். பல பிரதமர்களை பார்த்துள்ளோம். ஆனால் இப்படி பொய் பேசும் பிரதமரை பார்த்தில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் செவாலியர் என்ற பட்டத்தை திருப்பி கொடுத்திருப்பார். வேறு யாருக்கு கொடுக்கலாம் என கேட்டிருந்தால் என்னையை விட சிறப்பாக மோடி நடிக்கிறார் அவருக்கு கொடுத்து விடுங்கள் என கூறியிருப்பார். நானாவது படத்தில் நடிக்கிறேன். ஆனால் மோடி நிஜத்திலும் நடிப்பதாக கூறியிருப்பார் என முத்தரசன் தெரிவித்தார்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!