பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி.. ஸ்டேடியம் கொண்டு வருதா? நல்ல காமெடி : திமுக மீது அண்ணாமலை அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2024, 7:36 pm

பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி.. ஸ்டேடியம் கொண்டு வருதா? நல்ல காமெடி : திமுக மீது அண்ணாமலை அட்டாக்!

கோவையில் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத் தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்”, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இது குறித்து விமர்சனம் செய்துள்ள அண்ணாமலை, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 2021-ம் ஆண்டில் அவர் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திமுகவின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது, கோவை மக்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?