தலைவரால் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கொட்டு… தேர்தலுக்குப் பிறகு ஆளுநர் பதவி கிடையாது : கனிமொழி உறுதி…!!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 9:26 pm

தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று வந்துவிட்டது என்றும், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்க வேண்டும்? எனறு திமுக வேட்பாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: குஷ்பு ஒதுங்கியதற்கு ராதிகா காரணமா….? நட்டாவுக்கு கடிதம் எழுதிய ரகசியம்… அதிர்ச்சியில் தமிழக பாஜக!

இதில் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இண்டியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி கூறியதாவது :- இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றியவர் தான் தமிழச்சி தங்கபாண்டியன். இத்தொகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். இப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பல மருத்துவ முகாம்களை நடத்தியவர், இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு வாகனங்கள், செயற்கை நாற்காலிகள் வழங்கி உள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி பெற்று, 2 மாநிலங்களில் ஆளுநர் தமிழச்சி சௌந்தரராஜன் ஆனார், பதவிகளை ராஜினாமா செய்து இம்முறை இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு வெற்றியும் கிடையாது, ஆளுநர் பதவியும் கிடையாது, ஒன்றியத்தில் நாம் ஆட்சி தான் அமைய போகிறது.

தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று வந்துவிட்டது, ஒன்றிய நிதி எல்லாம் சமஸ்கிருத மொழிக்கு வழங்கி விட்டு, தேர்தல் சமயத்தில் மோடி, தமிழ் மொழி கற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது, பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்க வேண்டும்? நாம் தலைவர் தொடுத்த வழக்கின் மூலம் ஆளுநர் தலையில் கொட்டு வைத்து உச்சநீதிமன்றம். இந்தியாவிலே முதல் மாநிலம் நாம் தமிழ்நாடு தான், நம்மை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து செய்ய நிதி இல்லை என்று சொல்லும் பாஜக, கார்பரேட் நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி மேல் கடந்த 10 வருட ஆட்சியில் கடன் ரத்து செய்துள்ளது பாஜக. மேலும், நாம் வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி கூறினர் இதுவரை 1 ரூபாய் கூட போடவில்லை, ஆனால் நாம் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக உள்ளது என இதுவரை 21,000 ஆயிரம் கோடி அபராதமாகப் பிடித்துள்ளது.

மேலும், உழைக்கும் பெண்களுக்காக வசதிக்காகத் தோழி விடுதி அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, எனத் தெரிவித்தார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!