என்னை விட அஜித்தை தானே பிடிக்கும்.. பிரபல நடிகையிடம் வெளிப்படையாக கேட்ட விஜய்..!
Author: Vignesh9 April 2024, 11:54 am
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
மேலும் படிக்க: டிஷ்யூம்.. டிஷ்யூம்.. அவர் கூட 6 வருஷமா பேச்சுவார்த்தை இல்லை: மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!
தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
மேலும் படிக்க: என்னால தான் அவரு இறந்துட்டாரு.. உருக்கமாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி..!
இதனிடையே, மீனாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் விஜய் அது நடக்காததால் தன்னுடைய ஷாஜகான் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலும் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும், அந்த படப்பிடிப்பின் போது விஜய் நடிகை மீனாவிடம் நானும் உங்களோடு நடிக்க மிகவும், முயற்சி செய்தேன் எனவும், ஆனால் நீங்கள் என் படத்திற்கு ஓகே சொல்லவே இல்லை எனவும், அஜித்துடன் மட்டும் படம் பண்ணியிருக்கிறீர்கள் என்றும், அதற்கு காரணம் உங்களுக்கு நடிகர் அஜித்தை தான் ரொம்ப பிடிக்குமா என கேட்டதாகவும், அதற்கு தான் அஜித் படங்களில் மட்டும் நடித்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அந்த கேள்விக்கு உண்மையாகவே மீனா என்ன சொல்வது தெரியாமல் அந்த சமயத்தில் தான் மிகவும், பிஸியாக இருந்ததாகவும், அதனால் தான் விஜய் உங்கள் படங்களில் தன்னால் நடிக்க முடியவில்லை தவிர வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்ததாக பேசியுள்ளார். ஆனால் தனக்கு அஜித் மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் நடிகை மீனாவே பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜயுடன் நடிக்காதற்கு இது தான் காரணமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.