இப்போ 400+.. மே இறுதியில் 250 ஆக குறையும்.. பாஜகவுக்கு ட்விஸ்ட் வைத்த முன்னாள் தேர்தல் ஆணையர்!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2024, 1:40 pm
இப்போ 400+.. மே இறுதியில் 250 ஆக குறையும்.. பாஜகவுக்கு ட்விஸ்ட் வைத்த முன்னாள் தேர்தல் ஆணையர்!
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பாஜகதான் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துகணிப்புகள் வெளியானது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பாஜக இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2010 முதல் 2012வரை தேர்தல் ஆணையர்க பதவி வகித்த எஸ்ஒய் குரேஷி தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் கட்சியனரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்போழ 400+ என்பார்கள், மே இறுதியில் அது 250ஆக குறையும், ஜூன் முதல் வாரத்தில் இது 175 – 200 என்ற அளவில் இருக்கும்.
நான் சொன்னது அரை டஜன் அல்போன்சா மாம்பழத்தின் விலையை பற்றி, ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியது இல்லை என மறைமுகமாக பாஜகவை தாக்கி பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்ததும் பாஜகவினர் குரேஷியின் பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.