சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 8:53 am

கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சேரன் மாநகர் அருகே உள்ள வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. இரவு சில வாலிபர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட்டுக்கான பணத்தை கேட்டபோது தகராறு செய்துள்ளனர். அப்போது,வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேர்தலுக்காக துபாய் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணம்… மலேசியா ரிட்டர்ன் ஷாக்… சிக்கலில் தமிழக அரசியல் கட்சி..!!

பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டுவீசி உள்ளனர். இதனால், பெட்டிக்கடையின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, பீளமேடு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(25) சிகரெட் கேட்டு தகராறு செய்து கூட்டாளிகளுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதில் பாட்டில் துண்டு துண்டாக உடைந்து சேதம் அடைந்துள்ளது. உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அது உடனடியாக அணைக்கப்பட்டது. விரைந்து வந்து வரதராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகிறோம், எனக் கூறினர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!