அதிமுக ஆட்சி மட்டும் அமையட்டும்… அக்குவேறு ஆணிவேராக அலசுவோம் ; திமுகவுக்கு இபிஎஸ் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
10 April 2024, 10:57 am

நிர்வாக திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்று திண்டுக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வைக்கின்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான முகமது முபாரக்கை ஆதரித்து நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: பதில் சொல்லுங்க மோடி… பட்டியல் போட்டு சவால் விட்ட CM ஸ்டாலின்… கேரண்டி தர தயாரா..?

பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது :- SDPIயை சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும். ஸ்டாலின் கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

செல்லும் இடங்களில் எல்லாம் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்தோம் என்பதை சொல்ல மறுக்கிறார். மூன்று ஆண்டு காலத்தில் தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அங்கு சரக்கு இல்லை. உருண்டு புரண்டாலும் ஸ்டாலின் அவர்களே உங்களால் ஜெயிக்க முடியாது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கியது தான் மிச்சம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பெஞ்சை தேய்த்தது தான் மிச்சம். நீங்கள் என்ன செய்தீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். நெல்லை முபாரக் வெற்றி பெற்று வந்தால் பொதுமக்கள் ஆகிய உங்களுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தில் திராணி வேண்டும். அது நம்மிடம் இருக்கிறது.

ஸ்டாலினின் இரட்டை வேடம் மக்களுக்கு தெரிந்து விட்டது. எனவே இந்த முறை உங்களால் வெற்றி பெற முடியாது. அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஸ்டாலின் எத்தனை பொய் மூட்டுகளை அவிழ்த்து விட்டாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என்று கூறினார்.

இதுவரை எங்கு குறைத்தீர்கள் வெறும் 3 ரூபாய் தான் குறைத்து உள்ளீர்கள். கேஸ் சிலிண்டர் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் 500 ரூபாய்க்கு குறைக்கப்படும் என ஸ்டாலின் கூறி வருகிறார். இப்போது 100 ரூபாய் குறைக்க வேண்டியது தானே, தேர்தலுக்குப் பிறகு 500 ரூபாய் தருவதாக சொல்கிறீர்களே. இப்ப 700 ரூபாய் தரவில்லை. இது ஏமாற்று வேலை தானே. தாலிக்குத் தங்கம் 8 கிராம் தங்கமும், ஐம்பதாயிரம் ரூபாயும் அதிமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும் அதை நிறுத்திவிட்டனர். இதுதான் திமுகவின் சாதனை.

மேலும் படிக்க: தங்கம் விலை இன்றும் உயர்வு… புதிய உச்சம் தொட்டு விற்பனை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவித்து, அதற்கு ஒரு பெயரை வைத்துவிட்டு, ஒரு குழுவை அமைத்து விடுவார். மூன்று ஆண்டுகளில் ஸ்டாலின் 52 குழுக்களை அமைத்துள்ள இந்த 52 குழு என்ன ஆயிற்று. 52 குழு கிடப்பில் கிடக்கிறது. காரணம் நிர்வாக திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

தேர்தல் பத்திரத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது. அவருக்கு 646 கோடி பத்தல போல இருக்கிறது. பாஜகவிற்கு 6000 கோடியும், திமுகவிற்கு 646 நிதி கொடுத்து உள்ளனர். 6000 கோடி வாங்கி உள்ளதாக இவர் கூறுகிறார். 646 கோடி வாங்கிய நீங்கள் என்ன பதில் கூற உள்ளீர்கள். மூன்று ஆண்டுகளில் இந்த பணத்தை முக ஸ்டாலின் வாங்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதிலிருந்து எங்களுக்கு 6 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அது விளையாட்டில் இருந்து கிடைத்த தொகையை தவிர, அது தவறில்லை. ஆனால் உங்களுக்கு, திமுகவிற்கு கிடைத்தது, சூதாட்டத்தில், ஆன்லைன் ரம்மியில் இருந்து கிடைத்தது. அந்த நிறுவனத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூதாட்டத்திலிருந்து பெறப்பட்ட தொகை.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் நோண்டி எடுத்து அக்குவேறு ஆணிவேராக எங்கிருந்து எவ்வளவு தேர்தல் பத்திரத்தின் மூலமாக பணம் பெற்றீர்கள் என எடுத்து நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் நிறுவனத்திற்கு எவ்வளவு திட்டத்திற்கு அனுமதி கொடுத்திருப்பார்கள். அப்படி அனுமதி கொடுத்தால் மட்டுமே, இதை அவர்களுக்கு கொடுத்திருக்க முடியும்.

உதயநிதி ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களிடம் உங்களது குரல்களை இந்த புகார் பெட்டியில் போடுங்கள், என இது போன்ற ஒரு புகார் பெட்டியை வைத்து, புகார் வாங்க விடாமல் கூறினார். அவர் கிடைக்கப்பெறும் புகார் பெட்டியில் மனுக்களை சென்னைக்கு எடுத்துச் சென்று மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என கூறினார் அவ்வாறு எடுத்துச் சென்ற காணாமல் போய்விட்டது.

விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு சென்று விட்டது அனைத்து பொருட்களும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது என மதுரையில் மக்களை சந்தித்தபோது கூறுகின்றனர் விலை குறைப்பதற்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

அதிமுகவிற்க்கு, ஜாதியும் கிடையாது மதமும் கிடையாது. ஜாதியும், மதமும் மேம்படுத்தி காட்டுவதை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. விலைவாசி உயர்வை உயர்த்தி விட்டு ஸ்டாலின் பொதுமக்களை பார்த்து நலமா என கேட்கிறார் மக்கள் கோபப்பட மாட்டார்களா டாஸ்மாக் கடையில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்கிறது.

ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் ஏழை எளிய தொழிலாளியின் பணம் முப்பதாயிரம் கோடியை கப்பம் கொட்டிகிறார் என கூறினார்கள் அப்படிப்பட்டவர் தான் தற்போது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் அந்த செயல்வீரர் அதிமுகவில் இருக்கும்போது அவர் ஊழல்வாதி என்கிற அதே நபர் திமுகவிற்கு சென்ற உடன் நல்ல செயல்வீரர் என்று சொல்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் செல்கிறார் இதை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார் விளம்பரம் தேடி வருகிறார். மதுரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டினோம் அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்தது நாடாளுமன்றத் தேர்தலில் 38 திமுக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர் வெற்றி பெற்றவர்கள் இந்த செங்கலை கொண்டு போய் பாராளுமன்றத்தில் காட்ட வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு தமிழகத்தில் ஊர் ஊராகச் சென்று காட்டுவதால் என்ன பலன் அளிக்கப் போகிறது, என பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0