திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் ஐடி ரெய்டு… நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்ததால் பரபரப்பு..!!!
Author: Babu Lakshmanan10 April 2024, 11:30 am
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார், அவர் தனி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சி மட்டும் அமையட்டும்… அக்குவேறு ஆணிவேராக அலசுவோம் ; திமுகவுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
குறிப்பாக நேற்று காலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். சிதம்பரம் அடுத்த சி. தண்டேஸ்வரநல்லூர், நடேசன் நகரில் விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவரது வீட்டில் திருமாவளவன் தங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: பதில் சொல்லுங்க மோடி… பட்டியல் போட்டு சவால் விட்ட CM ஸ்டாலின்… கேரண்டி தர தயாரா..?
இந்த நிலையில், திருமாவளவன் பிரச்சாரம் செய்ய வெளியே சென்ற போது வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அந்த வீட்டிற்குள் சென்று திருமாவளவன் தங்கிருக்கும் அறைக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிலையில், சோதனையில் எந்த ஒரு ஆவணங்களும், பணமும் இல்லாததால் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
மேலும், முருகானந்தம் இன்று கடலூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து சென்றுள்ளனர். திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.