மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடமே மாறும்.. நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 2:30 pm

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடமே மாறும்.. நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள், வெற்றி வியூகங்கள் என அரசியல் கட்சிகள் படுவேகமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சியின் மீது மற்ற கட்சிகள் எதிர்வினையாற்றி வருவது வாடிக்கையே என்றாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பாஜக மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாகவே மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பரகலா பிரபாகர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நிர்மலா சீதாராமனின் கணவரான பரகலா பிரபாகர் லண்டனில் பொருளாதாரத்தில் PhD முடித்து, அரசியல் சார்ந்த பொருளாதார நிபுணர் மற்றும் கொள்கை ஆலோசகராகவும் உள்ளார்.

தற்போது இவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை இந்திய அரசியல் கட்சியினரை உற்று நோக்க வைத்துள்ளது. மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் மீண்டும் தேர்தல் நடக்காது என கூறியுள்ளார்.

புனேவில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றால் இந்திய வரைபடமே மாறும், நாடு முழுவதும் லடாக் – மணிப்பூர் போன்ற சூழல் உருவாகும்.

இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சு செங்கோட்டையில் இருந்தே வெளியாகும், மீண்டும் தேர்தலே நடக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!