பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்.. கட்சியில் இருந்தும் திடீர் விலகல் : ஆம் ஆத்மிக்கு சோதனை மேல் சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 6:37 pm

பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்.. கட்சியில் இருந்தும் திடீர் விலகல் : ஆம் ஆத்மிக்கு சோதனை மேல் சோதனை!!

குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் டெல்லி சட்டசபையில் எதிரொலித்தது.

டெல்லியில் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினர். டெல்லி அரசில் அடுத்தடுத்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், டெல்லி அரசில் அமைச்சராக உள்ள ராஜ் குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா செய்வதாகவும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Chinmayi’s viral social media post “உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
  • Views: - 350

    0

    0