அடுத்த முதலமைச்சரே வாழ்க.. தொண்டர்கள் கோஷம் : அன்புமணி ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்..!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2024, 8:23 pm
அடுத்த முதலமைச்சரே வாழ்க.. தொண்டர்கள் கோஷம் : அன்புமணி ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்..!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முனைவர் செளமியாவை ஆதரித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாள இசையுடன் வரவேற்றனர். அப்போது அன்புமணி ராமதாஸின் பிரச்சார வாகனம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலைய பகுதியில் நின்றிருந்த தொண்டர்களின் மத்தியில் உள்ளே நுழைய அவரை பார்த்ததும் குஷியான தொண்டார்கள் மருத்துவர் வாழ்க! சின்னாய்யா வாழ்க! சமூக நீதி காவலர் வாழ்க! விவசாயிகளின் காவலர் வாழ்க!
நாளை முதல்வரே ,எங்களின் தலைவரே , அடுத்த முதல்வரே எங்களுக்கான தலைவரே ! என கூட்டத்தில் இருந்த கோஷங்கள் எழும்ப பிரச்சார வாகனத்தில் ராஜாவை போல் கம்பீர போஸ் கொடுக்க கூட்டத்திலிரூந்து கோஷ சத்தம் நிக்காமல் ஒலிக்க தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி கம்பீரமாக நின்று பிரச்சாரம் செய்தார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.