திமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா? பள்ளிக் குழந்தைகளை யாசகம் எடுப்பது போல அமர வைத்ததால் பரபரப்பு..Viral Video!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 10:03 pm

திமுக பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா? பள்ளிக் குழந்தைகளை யாசகம் எடுப்பது போல அமர வைத்ததால் பரபரப்பு..Viral Video!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலுவத்தூரில் திண்டுக்கல் பாராளுமன்ற திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் 50 ரூபாய் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சிறு குழந்தைகளை கையில் அருவாள் சுத்தியல் சின்ன பதாகைகளுடன் யாசகம் எடுப்பது போல் அமர வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூவனூத்து புதூர், நொச்சி ஓடைப்பட்டி, குரும்பபட்டி, கொளக்காரன்பட்டி, கல்லுப்பட்டி, ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட ஊர்களில் இரண்டாம் கட்டமாக பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

பிரச்சாரத்தின் போது சிலுவத்தூர், அதிகாரிபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 50 ரூபாய் திமுகவினரால் வழங்கப்பட்டது.

மேலும் சிலுவத்தூர், அதிகாரிபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தின் போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் ரூபாய் 50 மற்றும் பணம் வழங்கிய வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில்வார்பட்டி என்ற ஊரில் பள்ளிச்சீருடை அணிந்த குழந்தைகளிடம் கட்சி சின்னம் பொறித்த பதாகையும் ஆரத்தி தட்டினையும் கொடுத்து யாசகம் எடுப்பது போல அமர வைத்திருந்தது காண்போருக்கு வேதனையை அளித்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 282

    0

    0