அது நடந்தது உண்மை தான்… ED விசாரணை குறித்து இயக்குநர் அமீர் சொன்ன தகவல்..!!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 10:37 am

என் மீதான குற்றச்சாட்டும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன் என்று மதுரையில் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்துகொண்டார்.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

பின்னர் இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது :- ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு நேற்று முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், எனக் கூறினார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, “என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. NCB 11 மணி நேர விசாரணை மற்றும் ED ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால், என்ன எடுத்துள்ளார்கள், அவர்கள் தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான், எந்த விசாரணைக்கும் நான் தயார்.

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும், எந்த தொடர்பு இல்லை என்பதை நிருபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பது தான் என்னிடம் வரும் வார்த்தை,” எனக் கூறினார்.

மேலும் படிக்க: திசை மாறும் அரசு ஊழியர்கள் ஓட்டு?… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்

டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு, “உறுதியாக சொல்ல முடியாது. இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன்,” என்றார்.

ED ரெய்டில் உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு, “இதனை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை. இறைவன் மிகப்பெரியவன் என சொல்லிக்கொண்டு கடந்து போறவன் நான்,” எனக் கூறினார்.

ED விசாரணை நேர்மையாக உள்ளதா…?, “விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா..? இல்லையா…? என்பது எனக்கு தெரியாது. நேற்று இரவு EDசோதனை முடிவடைந்தது. இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள்,” என்றார்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!