ஹர்திக் பாண்டியா சகோதரர் திடீர் கைது… மோசடி வழக்கில் ஆக்ஷன்.. அதிர்ச்சியில் IPL அணிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 2:00 pm

ஹர்திக் பாண்டியா சகேதாரர் திடீர் கைது… மோசடி வழக்கில் ஆக்ஷன்.. அதிர்ச்சியில் IPL அணிகள்!

ஐபில் 2024 தொடர் தொடங்கியதுமே ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. முக்கிய காரணம் மும்பை அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது. இதற்கு காரணம், டிரான்ஸ்பர் என்ற முறையில் குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி விலைக்கு வாங்கியது.

பின்னர் மும்பை அணியில் இணைந்த அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது அணி நிர்வாகம். ரோகித் ஷர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது சர்ச்சைக்குள்ளானது.

பின்னர் ரோகித் ஷர்மாவும் இதை பொறுமையாக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். ஆனால் ஹர்திக் தலைமையிலான மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோற்றது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்ணால், ஹர்திக், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூ.1 கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப விகிதத்தையும் அதிகரித்து வைபவ் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…