வைகோவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை… பாஜகவில் கார்த்திகேயன் கோபாலசாமி… யார் இவர்…?

Author: Babu Lakshmanan
11 April 2024, 3:53 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கார்த்திகேயன் கோபாலசாமி பாஜகவில் இணைந்தது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நாள்தோறும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திடீரென 200 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்… தரைதட்டிய படகுகள்… மீனவர்கள் அதிர்ச்சி..!!!

அதேவேளையில், கட்சி தாவலகளும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமியுடன் மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்