கிளம்பு.. கிளம்பு… கெஞ்சிய அனுபமா.. கத்தி கூச்சலிட்டு துறத்திய ரசிகர்கள்..!(வீடியோ)

Author: Vignesh
11 April 2024, 4:55 pm

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

anupama parameswaran - updatenews360

மேலும் படிக்க: அந்த விஷயத்திற்காக அடம் பிடித்த மீனா.. அதுக்கு நீ சரிபட்டு வர மாட்டீங்கனு சொன்ன ரஜினி..!

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

anupama parameswaran - updatenews360

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!

anupama parameswaran - updatenews360

அனுபமா கடந்தாண்டு வெளியான ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப் லாக் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளம் பெற்றிருந்தார். மேலும், அவர் நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் அவர் மடிமீது உட்கார்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது, டில்லு ஸ்கொயர் படம் கடந்த மாதம் வெளியான நிலையில், அப்படத்தின் சக்ஸஸ்மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், நடிகர் என்டிஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் அனுபமா பேச சென்றுள்ளார். அப்போது, அவரை பேச விடாமல் என்டிஆர் இன் ரசிகர்கள் கத்தியும் கீழே செல்லவும் கூறி கூச்சலிட்டுள்ளனர். இதனால், சங்கடப்பட்ட அனுபமா ரெண்டு நிமிடமாவது பேசுகிறேன் என்று கெஞ்சி இருக்கிறார். அதையும் மீறியும் ரசிகர்கள் கூச்சலிட்டதால் நன்றி கூறிவிட்டு சென்றார். இந்த சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…