மதம், இனம் வேண்டாம்.. எல்லாருமே வாங்க : Ramzanஐ முன்னிட்டு இலவசமாக பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan11 April 2024, 4:59 pm
மதம், இனம் வேண்டாம்.. எல்லாருமே வாங்க : Ramzanஐ முன்னிட்டு இலவசமாக பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்!
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.இன்று கோவையில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.
இந்த நிலையிலே கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் விடிய விடிய ரமலான் பண்டிகைக்கான விருந்து தயாரிக்கப்பட்டது.கோவையின் பல்வேறு பகுதிகளில் நண்பர்கள் குழு, சமூக நல்லிணக்க குழுக்கள் இன்று சேர்ந்து ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட குழுக்களால் அசைவ விருந்தானா பிரியாணி அனைவருக்கும் இலவமாக வழங்கப்பட்டது.
கோவை போத்தனூர்,உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து படைக்கும் விதத்தில் உணவு தயார் செய்து சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கேசரி உள்ளிட்ட உணவுகள் காலை முதல் விநியோகம் செய்யப்பட்டது.
நோன்பு திறக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பசியுடன் வாடும் அனைத்து மத மக்களுக்கும் இந்த உணவு இன்று வழங்குகின்றனர். நோன்பிருந்து பசியின் அருமையை உணர்ந்த இஸ்லாமியர்கள் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் நிலையில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இதனை செய்கின்றனர்.
ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் 10 முதல் 30 ராட்சத பாத்திரங்களில், விடிய விடிய கமகமவென பிரியாணி தயார் செய்து சிறப்பு தொழுகை முடித்த கையோடு வரும் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று பக்கெட்களில் பிரியாணி வாங்கி சென்று அவர்கள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தினருக்கும் தந்து இன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடினார்கள்.
அசைவ விருந்து நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கோவையில் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு பரிமாருகின்றனர்.
கோவை மாநகர பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பிரியானி வழங்கி ரமலான் பண்டிகை கொண்டாடினார்கள்.