அண்ணாமலை நாக்கை வெட்டணும்.. பாஜகவில் திருட்டு மொல்லமாரி பசங்கதான் இருக்காங்க.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 9:49 pm

அண்ணாமலை நாக்கை வெட்டணும்.. பாஜகவில் திருட்டு மொல்லமாரி பசங்கதான் இருக்காங்க.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதவராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவர் பேசியதாவது, மருத்துவர் சரவணன் பரிசுத்தமானவர். அவரை பார்த்தாலே ஓட்டு போட்டுவிடுவார்கள். எங்கே குழவை போடுங்க. முறத்தால் புலியை விரட்டுபவர்கள் பரவை பகுதி பெண்கள்.

சொன்ன வாக்குறுதி சொல்லாத வாக்குறுதியையும் அதிமுக நிறைவேற்றியுள்ளது. 1000ரூபாயை கூட தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். விலை ஏறி விட்டதா இல்லையா. ஆமா இல்லையா எனக்கூறுகிறார்கள்.சண்டாள பய ஆட்சி. ஆட்டுக்கூட்டம் ஒன்னு இருக்கு அதைப்பற்றி பின்னால பேசுகிறேன்.

சுதந்திரம் வாங்கிய மகாத்மாவுக்கு கட்டிடம் கட்டி கொடுத்தவன் நான்.
உங்கள் வீட்டு பிள்ளை என்பதால் அரவணைத்தீர்கள். இல்லையென்றால் தூக்கி எறிந்திருப்பீர்கள்.

பொய் சொல்லியே ஆட்சிக்கு வருபவர்கள் திமுகவும், பாஜகவும், விமானத்தில் வருகிறீர்கள். ரோடு ஷோ நடத்துகிறார்கள். என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள்.

ஒரு ஆட்டுக்குட்டி உள்ளது. உயரமான சுவற்றில் ஆட்டுக்குட்டி நின்று கொண்டு அவ்வழியாக சென்ற சிங்கத்தை பார்த்து சொல்லியதாம் குலையை பறித்து எனக்கு கொடு என்று சொன்னதாம்.

சுவர் என்பது ஆளுங்கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் மெதப்பில் அண்ணாமலை பேசி வருகிறார். முந்தாநாள் பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை.

உங்கள் அப்பன் இல்ல யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அரசியலில் கத்துக்குட்டி அண்ணாமலை. அ என்று சொன்ன அழகிரியை எதிர்த்து அரசியல் செய்தவன் நான். நீங்கள் எம்மாத்திரம். வரலாறு தெரியாத அண்ணாமலை.

அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா? இல்லை பிட் டிச்சு பாஸ் செய்தாரா என தெரியவில்லை. கவுன்சிலர் கூட நின்று ஜெயித்ததில்லை அண்ணாமலை. ஆனால் நிறைய பேசுகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 1000ரூபாய் கொடுத்தும் அண்ணாமலைக்கு ஓட்டு போடவில்லை மக்கள். அதிமுகவையும், அதிமுக தலைவர்களையும் பேச அண்ணாமலைக்கு அருகதையே இல்லை.

அதிமுக அழிந்து போகும் எனக்கூறும் அண்ணாமலைக்கு மக்கள் சாபமிடுவார்கள். குலவை போட்டு சாபமிடுங்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை இழிவாக பேச ண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது.

அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டுமா? இல்லையா? வெட்டப்பட வேண்டும். 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் பாஜக. பாஜகவில் முழுவதும் திருட்டு பய மொல்லமாரி பய அனைவரும் கட்சியில் சேர்ந்துவிட்டனர்.

அண்ணாமலை வந்த பின்பு தான் இவ்வாறு பாஜகவில் நடக்கிறது. அதிமுக அழிந்து போகும் எனக்கூறும் அண்ணாமலை அழிந்துபோவார். அரசியலில் அப்புறப்படுத்தப்படுவாய். அட்ரஸ் இல்லாமல் போவாய்.
தேன்கூட்டில் கை வைத்தால் நிச்சயம் பாதிக்கப்படுவான் என ஆவேசமாக பேசினார்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!