10 ஆண்டுகள் ஆயிடுச்சுல.. பாஜகவுக்கு இறுமாப்பு வரத்தான் செய்யும் ; முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்
Author: Babu Lakshmanan12 April 2024, 1:12 pm
*10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலே பாஜகவுக்கு இறுமாப்பு வந்து விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க: பெங்களூரூ குண்டுவெடிப்பு… முக்கிய குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் கைது ; என்ஐஏ அதிரடி..!!
அப்பொழுது, அவர் பொதுமக்கள் முன்னிலையில் சிதம்பரம் பேசியதாவது;- பத்தாண்டுகள் ஒரு கட்சி ஆட்சி ஆட்சி செய்தாலே போதும். ஒரு கட்சி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தால் அவர்களுக்கு இறுமாப்பு வந்து விடுகிறது. அலட்சியம்,ஆணவம் வந்துவிடுகிறது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வேண்டுமென்று திமுகவிற்கு வாக்களித்தீர்கள். அவர்கள் மூன்று ஆண்டுகளில் முத்தான, முத்திரையான திட்டங்களையும் கொடுத்துள்ளனர்.
மேலும், 6,809 கோயில்களில் குடமுழுக்கு செய்துள்ளனர். 7,000 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை மீட்டு கோயில்களுக்கு மீட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்று சொன்னாலே இரண்டு பெரிய பூதங்கள் உயர்ந்து நிற்கின்றன. அதில் ஒன்று விலைவாசி உயர்வு மற்றொன்று வேலை வாய்ப்பின்மை, எனக் கூறினார்.