‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்… இனி பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம்’ ; கூட்டணியை விட்டு விலகிய கோவை மாவட்ட பாமக..?

Author: Babu Lakshmanan
12 April 2024, 5:04 pm

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கோவை மாவட்ட பாமக அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!

இந்த நிலையில், கோவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குசேகரித்து வந்த நிலையில், இனி அண்ணாமைலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று கோவை மாவட்ட பாமக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் மற்றும் பாமக மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுதா கூறியதாவது:- கூட்டணி தர்மம் முக்கியம் தான். அதைவிட சுயமரியாதை முக்கியம். வேட்பாளர் அறிமுக கூட்டம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு, பரப்புரை, தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சி என எதற்கும் அழைப்பு விடுப்பதில்லை. கோவை தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி கட்சி தலைவர்களை மதிப்பதே இல்லை.

மேலும் படிக்க: கோவைக்கு 100 வாக்குறுதி… 500 நாளில் நிறைவேற்றம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை…!!!

அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம், எனக் கூறியுள்ளனர். இது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!