ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. வார இறுதியில் மளமளவென குறைந்து விற்பனை.. எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
13 April 2024, 10:14 am

ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. வார இறுதியில் மளமளவென குறைந்து விற்பனை.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரம் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை, வார இறுதி நாளான இன்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6750க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.53,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!

அதேபோல, வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.100 சரிந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…