தேர்தலில் இபிஎஸின் மூவ்… கிளம்பிய கேள்வி… தடாலடியாக விளக்கம் கொடுத்து ஆப் செய்த நடிகை கவுதமி..!!
Author: Babu Lakshmanan13 April 2024, 10:45 am
பெரிய கூட்டணி என்பது மக்களோடு போடும் கூட்டணி தான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு கூட்டணி வைத்துள்ளதாக நடிகை கௌதமி தெரிவித்துள்ளது.
திருச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை கவுதமி திருச்சியில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு, ஆண்டாள் வீதி, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. வார இறுதியில் மளமளவென குறைந்து விற்பனை.. எவ்வளவு தெரியுமா..?
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி கூறியதாவது :- பிரச்சாரம் செல்லும் இடத்தில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. மாற்று கருத்துக்கு வாய்ப்பே இல்லை. இரட்டை இலை சின்னத்துக்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக பெரிய மாற்றத்தை காண உள்ளோம், என தெரிவித்தார்.
திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தீப்பெட்டி சின்னம் பொது மக்களிடம் செல்லவில்லை என்ற கேள்விக்கு, சின்னம் ரீச் ஆகாமல் இருந்தாலும். தேர்தல் களத்தில் இறங்கி மக்களுடைய உறுப்பினராக பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிலர் என்னுடைய சொந்த விருப்பத்தோடு வரவில்லை, கட்டாயத்தைப்படுத்தி நான் வந்தேன் என கூறுகின்றனர்.
நான் பார்த்த வகையில் நீங்கள் சொன்ன வேட்பாளர் அப்படிப்பட்டவர். நான் விருப்பத்திற்காக வரவில்லை கட்சி காப்பாற்ற வர வேண்டும் என கூறியுள்ளார்.
யாரைப் பார்த்து நான் உங்களுக்கு இருக்கேன் என்று சொல்கிறார்களோ, அவர்கள் அப்பாவி மக்கள் மக்களுடைய உறுப்பினராக தேர்ந்தெடுக்க படனும். ஆசைப்படுகிற ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வேட்பாளரும் உண்மையில் முழு மனதோடு செயல்படுவதோடு, உறுதியோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் அது மக்களுக்கு செய்த அநியாயமாகவும், துரோகமாகவும் இருக்கிறது, எனக் கூறினார்.
மேலும் படிக்க: ஆமாம், முதல்வருக்கு தூக்கம் போனது உண்மைதான்… ஆனால்… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி!!!
மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார் என்ற கேள்விக்கு, நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது. சமீபகாலமாக வருகிறார் கடந்த 10 வருடத்தில் நம் மாநிலத்தில் அவருடைய கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் யாரும் வந்ததில்லை, என்றார்.
பாஜக திமுக பெரிய கூட்டணி உடன் போட்டியிடுகிறது என்ற கேள்விக்கு, எதை வைத்து பெரிய கூட்டணி என்று எடை போடுகிறீர்கள். மிகப்பெரிய கூட்டணி என்பது மக்களோடு தான் இருக்க வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. மகத்தான கூட்டணி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியார் மக்களோடு வைத்துள்ளார்.
மகளிர்க்கு சம உரிமை தர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். ஆனால் 3 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளார் என்ற கேள்விக்கு, களத்தில் சரியான ஆட்களை கொண்டு செல்ல வேண்டும். அந்தத் தொகுதிக்கான சிறந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தொகுதிக்கு யார் சரியான உறுப்பினர் பார்த்து ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துள்ளார், என தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மலைக்கோட்டை ஐயப்பன் பகுதி செயலர் அன்பழகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.