நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்… தந்தை முன்பு தூக்கி வீசப்பட்ட குழந்தை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 11:05 am

மதுரையில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்கள் நிகழ்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் தந்தை முன்பு குழந்தை தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் ஒத்தக்கடை முதல் உத்தங்குடி வரை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் முறையாக தடுப்புகள் அமைக்கப்படாத காரணமாக, அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கு இடையே அடுத்து உள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிரபல பேக்கரி பகுதியில் சாலையை கடக்கும் வகையில் தடுப்புகள் முறையாக அமைக்கப்படாமல், டிவைட் ஏற்படுத்தியதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க: ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை.. வார இறுதியில் மளமளவென குறைந்து விற்பனை.. எவ்வளவு தெரியுமா..?

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பத்திற்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில். சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பதினொன்றாம் தேதி இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் வந்த சிறுமி ஒருவர் சாலையை கடக்க நின்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி குழந்தை தூக்கி வீசப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து பலமுறை ஒரே இடத்தில் விபத்து ஏற்பட்டும் அந்த பகுதியில், முறையாக தடுப்புகள் அமைக்கப்படாதால் விபத்துக்கு அதிகரித்து வருவதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!