பூச்சாண்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.. ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என தெரியும்..EPS சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 7:04 pm

பூச்சாண்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.. ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என தெரியும்..EPS சவால்!

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-2024-க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என சிலர் கூறுகிறார்கள். வேறு எங்கு போகும்?. அதிமுக இங்கேதான் இருக்கும். ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப்பார்க்கும் மாநாடாக அமைந்தது. அது சில பேருக்கு புரியாமல்… வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டது போலிக்கிறது. அதனால் இப்படி மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக-வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தின் அருள் ஆசியுடன் இருக்கக் கூடிய கட்சி அதிமுக என்பதை மறந்து கொண்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தெய்வ சக்தி உள்ள கட்சி. அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள். இதுதான் வரலாறு. இந்த கட்சியை எத்தனையோ பேர் எதிர்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிகிறதா? எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

சிலர் பலத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வை நம்பியவர்கள் கெட்டுப்போன சரித்திரம் கிடையாது.

அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு. அதிமுக-விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்றன கட்சி என கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!