வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு : ₹200 கோடி வசூல் செய்து மிரட்டிய மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு அதிர்ச்சி..!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 7:38 pm

வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு : ₹200 கோடி வசூல் செய்து மிரட்டிய மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு அதிர்ச்சி..!!!

மற்ற மொழி படங்கள் வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுவது இந்த காலத்தில் ட்ரெண்டாகி உள்ளது. ஏராளமான படங்கள் டப் செய்யப்பட்டு சின்னத்திரையில் ரிலீஸ் செய்வதும் வழக்கமாகிவிட்டது.

ஆனால் ஒரு நேரடி மலையாள மொழிப்படம் எந்தவித டப் செய்யப்படாமல் அப்படியே தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது என்றால் அது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தான்.

முதல் பாதியில் மலையாளம் அதிகம் இருந்தாலும், படம் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டில் தான் எடுக்கப்பட்டது. அதனால் இங்குள்ள ரசிகர்கள் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

அதுவும், குணா படத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை எடுக்கப்பட்ட படத்திற்கு தமிழகத்தில் மவுசு இல்லாமல் போனால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

தமிழ் ரசிகர்கள் மலையாளப் படத்தை புகழ்ந்து தள்ளியது இந்த படத்துக்காகத்தான். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படத்தில், சவுபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்து மிரட்டியுள்ளது. மலையாளத்தின் அதிகபட்ச வசூல் சாதனையை எட்டிப்பிடித்துள்ள இப்படம் இன்றும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் யார் கண்பட்டதோ படக்குழுவுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. கேராளவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த படத்துக்காக நான் ₹7 கோடியை முதலீடு செய்தேன். படத்தன் தயாரிப்பாளர்கள் படம் வெளியான பிறகு, படத்தின் லாபத்தில் 40% தருவதாக வாக்குறுதி அளித்தார்கள், நானும் காத்திருந்தேன், ஆனால் எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என குறிப்பிடிருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் வர்கி, படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 277

    0

    0