அண்ணாமலைக்கு ஜோசியம் நிச்சயம் கைக்கொடுக்கும்.. தேர்தலுக்கு பிறகு பாஜகவில் ஓபிஎஸ் இணைவார் : ஜெயக்குமார் விமர்சனம்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 9:55 pm

அண்ணாமலைக்கு ஜோசியம் நிச்சயம் கைக்கொடுக்கும்.. தேர்தலுக்கு பிறகு பாஜகவில் ஓபிஎஸ் இணைவார் : ஜெயக்குமார் விமர்சனம்.!!!

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிருஷ்ணன்கோவில், சோலையப்பன் தெரு பெரியபாளையத்தம்மன் கோவில் டாக்டர் விஜயராகவன் தெரு போஜராஜன் நகர் சீனிவாசபுரம் பார்த்தசாரதி பிரதான தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜெயக்குமார், பிரசாரத்தின் நடுவே கேமராக்களை வைத்து காட்சிகளை எடுத்தும் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேராதரவோடு, வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

விடியா அரசில் மக்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயலால் மக்கள் திமுக மீது கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்சனை காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விடியா திமுக அரசு தாரை வார்த்து கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.

எப்போதுமே தமிழகத்தின் உரிமையை காக்க பாடுபடுவது அதிமுக தான் எனவும், தமிழக மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொழில் செய்ய வேண்டும் என்றும், பாஜக , திமுக அரசுகள் மாநில உரிமையை மீட்காமல், கச்சத்தீவு, காவிரி விவகாரம் உட்பட நமது உரியையை விட்டு கொடுத்ததாக திமுகவை விமர்சித்தார்.

மக்கள் அளித்த வாக்குகளை பெற்று ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியவர், ஆளும் திமுக அரசு மக்களை ஏமாற்றி தமிழக மக்களுக்கு பட்டை நாமத்தை கொடுத்ததாகவும் கூறினார்.

அண்ணாமலை காவல் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். கச்சத்தீவு வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வரும் இயக்கம் என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகமாக உள்ளதாகவும், டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் தெரு தெருவாக பிரசாரம் பண்ண முடியுமா? ஆர் கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி சென்றவர் எனவும், ஊழல் வழக்கு மத்திய அரசு போட்டு விடுவார்கள் என அஞ்சி பாஜகவுடன் டிடிவி கூட்டணி வைத்துள்ளார்.

அண்ணாமலை என்று போர்டு போட்டு கிளி ஜோசியம் பார்க்கப்படும் வேலை செய்யலாம் என என விமர்சனம் செய்த அவர் முதலில் உங்களுடைய கட்சியை பாருங்கள் என்றும், அதிமுக கட்சியை தனதாக்கி கொள்ளலாம் டிடிவி,ஓபிஎஸ் என நினைத்தால் இலவு காத்த கிளியின் கதையாக தான் முடியும் எனவும் தெரிவித்தார்.

யாருக்காக இந்த மத்திய அரசு/ மோடி அரசு இருக்கிறது? எல்லா மிட்டா மிராசுதார்கள், கோடீஸ்வரர்களுக்காக தான் மோடி அரசு இருக்கிறது. சாதாரண மக்கள் 10 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கினால் எத்தனை முறை கேட்கிறார்கள்.

ஆனால் 10 லட்சம் கோடி கடன் வாங்கியவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்கிறார்கள். அந்தப் பணங்களை வசூலித்தால் இந்தியாவின் கடனை அடைத்து விடலாம் என தெரிவித்தார்

எடப்பாடி கே பழனிச்சாமி அரசு பாஜகவிடம் ஆட்சியை அடகு வைத்ததாக திமுக குற்றச்சாட்டை சொல்லுவது குறித்து பேசியவர், பொய்களின் புளுகு மூட்டை உருவம் ஸ்டாலின் தான் எனவும் நீட்டை கொண்டு வந்தது யார்? நீட் தேர்வு உட்பட மாநிலத்தின் பல உரிமைகளை திமுக விட்டு கொடுத்தது? மத்தியில் நீங்கள் 17 வருடங்கள் இருந்தும் என்ன செய்தீர்கள்?

மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவால் 5% மேல் வாக்கு வங்கியை ஏற்ற முடியாது என தெரிவித்தார். 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இந்தியாவில் பாஜக செய்யவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ், பாஜகவுக்கு போய் விடுவார் என்றும் ஏதாவது ஒரு மாநிலத்தில் அவருக்கு ஆளுநர் பொறுப்பு கொடுப்பார்கள் என கூறினார்

கடந்த (2019 தேர்தலில்) பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாங்கள் தோற்றோம். நானே தோற்றேன். 25 வருடமாக ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த தானே பாஜகவால் தோற்றதாகவும் கூறினார்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 231

    0

    0