அண்ணாமலைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் : கோவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2024, 11:51 am
அண்ணாமலைக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் : கோவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு..!!!
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் துவங்கிய இந்த பேரணி சிவானந்தகாலனி வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை ஆகியோர் வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈட்டுபட்டனர்.
பேரணியின் நிறைவில் பா.ஜ.க தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை,
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எனவும்,
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மிகப்பெரிய மகளிர் பேரணி மேற்கொண்டுள்ளார் எனவும், இந்த பேரணி
உற்சாகமான நடந்துள்ளது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன்,கோவை வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய மகளிர் ஆதரவு பேரணியின் மூலம் தெரிவித்து இருக்கின்றனர் எனவும், பிரதமர் மோடி முன்னெடுத்திருந்த திட்டங்களால் அவர்களுக்கு பலன்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது எனவும், மோடி அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருப்பவர் நிர்மலா சீதாராமன், அவர்கள் வந்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும், இந்த மகளிர் சக்தி தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.
தனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேரணி மூலமாக மக்களிடம் ஆதரவை கேட்டுக் கொண்டுள்ளோம் எனவும்,
நல்ல ஒரு ஊர்வலமாக கோவை நகரத்தில் நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஊர்வலம் எப்படி நடக்கின்றது என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என தெரிவித்த அவர்,மோடி அவர்களின் ஒவ்வொரு மக்கள் சேவையையும் மக்கள் பெற்று பயன் அடைந்தது இருக்கின்றனர் எனவும், நீலகிரி தொகுதியில் இன்று காலை பெண்களின் கருத்து கேட்டேன்,
அவர்களே இன்று எங்களுக்கு பெருவாரியாக திட்டங்கள் கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.
நான் பேச வேண்டிய விஷயங்களை பயனாளிகளே பேசும்போது மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்கள் கீழ் வரை போய் சேர்ந்திருக்கிறது எனபது தெரிந்தது எனவும், மோடி திட்டம் மட்டும் போடவில்லை, அதை கடைசி வரை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் எனவும், திட்டம் மட்டும் இல்லாமல், அங்கு தேவைப்படும் நிதி அனைத்தும் ஒதுக்கி, திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்க்கின்றதா என்பதை கண்காணிக்கின்றனர் என தெரிவித்தார்.
மாவட்டம் தோறும் பிரதமர் செய்யும் பணிகளை கண்ணால் பார்க்க முடிகிறது என தெரிவித்த அவர், மக்களிடையே ஒரு நல்ல கனெக்சன் கிடைத்திருக்கிறது எனவும், நல்ல ஒரு பிரதமர், நல்ல ஒரு மாநில தலைவர் ஆகியோரால் மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைக்க போகிறது என தெரிவித்தார்.
மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும், அண்ணாமலை மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்து கொண்டு இருந்த போது அவரது காலில் செய்தியாளர் ஒருவரின் மைக் விழுந்ததால் வலியால் தவித்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் ஏற்கனவே பிராக்சர் ஆன கால் என தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நிலைமையை சமாளித்தபடி பேட்டியளித்தார்.