நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 5:28 pm

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் சீலப் பாடியைச் சேர்ந்த ஆண்டிமடம் ஆறுமுகம் என்பவர் மோதிரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் நேற்று மாலை முள்ளிப்பாடி, மா.மு.கோவிலூர், பெரிய கோட்டை உள்ளிட்ட கிராமப்புறங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . பின்னர் இரவு தனது அலுவலகம் முன்பாக தனது சொந்த காரினை நிறுத்தி வைத்து உள்ளார்.

காலை பிரச்சாரம் செல்வதற்காக காரை எடுக்க சென்ற போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்த போது இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் கார் அருகே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்து விட்டு ,மீண்டும் காரில் சென்றுள்ளது பதிவாகி இருந்தது .

போலீஸ் டி ஐ ஜி முகாம் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதி அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!