அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைக்கிறார் பிரதமர் மோடி ; திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan14 April 2024, 6:46 pm
அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைத்து வருகிறார் பிரதமர் மோடி என்று வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்காக வாக்குகளை சேகரித்து விட்டு சென்றனர். தந்தையும், அமைச்சருமான துரைமுருகனும் கதிர் ஆனந்திற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேவேளையில், கதிர் ஆனந்த் வீதி வீதியாக, தெரு தெருவாக சென்று, வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையும் வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் பாஜக அரசு : அப்பட்டமான பொய் கணக்கு.. CM ஸ்டாலின் கண்டனம்!
இந்த நிலையில், பிரச்சாரம் ஒன்றில் பேசிய கதிர் ஆனந்த், “இந்திய தண்டனை சட்டமான இபிகோ என்பதை இந்தியில் மாற்றிவிட்டார். அது நமக்கு புரியவே புரியாது. அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை சிதைத்து வருகிறார் பிரதமர் மோடி. மோடியை வீட்டுக்கு அனுப்பி இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றுவோம்,” எனக் கூறினார்.