குணா குகையில் இருந்து கூட குதிச்சிடுவாங்க போல.. அருவியில் குதித்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய அனுஹாசன்..!(video)
Author: Vignesh15 April 2024, 10:56 am
உலக நாயகனின் அண்ணன் மகளான அனுஹாசன் தமிழில் இந்திரா, ஆளவந்தான், நலமயந்தி, ரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழிலை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அனுஹாசன் தற்போது படங்களில் நடிப்பது இல்லை. இப்போது எல்லாம் அவர் நிறைய பிட்னஸ் வீடியோக்களை தான் வெளியிட்டு வருகிறார்.
மேலும் படிக்க: மோசமான கமெண்ட்.. நச்சுனு பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லியின் மனைவி..! என்னன்னு பாருங்க?..
அவ்வப்போது, வெளியே செல்லும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில், இயற்கையில் உருவாகியுள்ள அருவியின் பாறையில் அப்படியே கைகளை தலைக்கு மேலே தூக்கிய படி சறுக்கி குளம் போல இருக்கும் தண்ணீருக்குள் குதிக்கும் வீடியோவை அனுஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விட்டால் குணா குகையில் இருந்து கூட குதிச்சிடுவாங்க போல என கூறி வருகின்றனர்.