பிரச்சாரம் முடிந்த கையோடு.. தங்கும் விடுதிகளில் அதிரடி RAID : அறையில் தங்கியவர்களுக்கு அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 8:59 pm

பிரச்சாரம் முடிந்த கையோடு.. தங்கும் விடுதிகளில் அதிரடி RAID : அறையில் தங்கியவர்களுக்கு அதிர்ச்சி!!

நாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வேலைகளில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பழனி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக பழனிக்கு வந்து தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கிய நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க: வேங்கைவயலில் அனுமதியின்றி பிரச்சாரம்.. நாம் தமிழர் வேட்பாளர், சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

மேலும் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்களுக்கு அறைகள் ஒதுக்கும்போது தேர்தல் தொடர்பான பிரச்சாரத்திற்கு வருகை தருகிறார்கள் என்று விவரத்தை கேட்டு அறை ஒதுக்க வேண்டும் என கூறி சோதனையில் ஈடுபட்டனர்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?