வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 8:47 am

வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு வலியுறுத்தல்!!

நம் தேசத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்துபவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் மிக அடிப்படையான உரிமையையும், பொறுப்பையும் மக்கள் கையில் எடுக்க வேண்டும் என்று அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சத்குரு அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நம் தேசத்தின் 18வது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர், “தேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் நாட்டை யார் வழி நடத்துவார்கள் என்பதை நிர்ணயிக்கும் இந்த மிக அடிப்படையான உரிமையையும், பொறுப்பையும் கையில் எடுக்க வேண்டும். ஜனநாயக செயல்முறையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த சக்தியை வீண் போக விடாதீர்கள் அல்லது நோட்டாவைத் தேர்ந்தெடுத்து பாரதத்தையும், அதன் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலத்தை கட்டமைக்கும் துடிப்பான பங்கு வகிக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள். நாம் இதனை நிகழச் செய்வோம். மிகுந்த அன்பும் ஆசியும்” எனக் கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu