கோடீஸ்வரர்களை திருமணம் செய்து செட்டிலான நடிகைகள்.. ஆத்தாடி அதுக்குன்னு 23 வயது வித்தியாசமா..!

Author: Vignesh
18 April 2024, 12:27 pm

பொதுவாக சினிமா பிரபலங்கள் படங்களில் நடித்து வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, வழக்கத்திற்கு மாறாக சமீப காலமாக வயது வித்தியாசம் அதிகம் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து விட்டது. அப்படி தன்னைவிட வயதானவர்களுடன் அதிலும், பல ஆண்டுகள் மூத்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில், வயசு வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

nazriya

நேரம் படத்தின் மூலமாகவும், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்த நஸ்ரியா தன்னுடன் சிறுவயதில் முன்னணி நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து தன்னுடைய 21 வயதில் 34 வயது இருக்கும் நடிகரை திருமணம் செய்தது, பணத்திற்காக தான் நஸ்ரியா இவ்வாறு செய்தார் என்று அந்த சமயத்தில் பல்வேறு விமர்சனங்கள் பேசப்பட்டது.

reema sen

ரீமாசென் 42 வயது தொழிலதிபர் திருமணம் செய்தார். ரீமாசென்னை விட ஒன்பது வயது அதிக வித்தியாசம் கொண்டவர். அவரது கணவர் அவரின் திருமணமும் பணத்திற்காக நடந்ததாக விமர்சிக்கப்பட்டது.

santhiya

காதல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சந்தியா 27 வயது இருக்கும்போது ஐடி நிறுவனம் நடத்தி வந்த 41 வயது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கிட்டத்தட்ட 14 வயது வித்தியாசம் என்பதால் அவரின் திருமணமும் பணத்திற்காக நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது.

Monica

குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை மோனிகா 27 வயதில் 50 வயது நபரை திருமணம் செய்து கொண்டார். 2015ல் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சினிமாவிலிருந்து மோனிகா முற்றிலும் விலகிவிட்டார். பணத்திற்காக தான் இவர் 50 வயது நபரை திருமணம் செய்ததாக பேசப்பட்டது.

மேலும் படிக்க: மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்?.. விளக்கம் கொடுத்த ரோபோ சங்கர் மருமகன்..!

சீரியல் நடிகையான நீலிமா தன்னைவிட அதிக வயதுடைய நபரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றது பணத்திற்காக தான் திருமணம் செய்தார் என்றும், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தது.

mahalakshmi

மேலும் படிக்க: பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ?.. காப்பியடித்தே இத்தனை கோடிகள் சொத்து சேர்த்துட்டாரே..!

சீரியல் நடிகையான மகாலட்சுமி பேட்மேன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். வயது இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், குண்டானவரை பணத்திற்காக திருமணம் செய்து விட்டாரோ என்று மகாலட்சுமி மீது விமர்சனங்கள் எழுந்தது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 288

    0

    0