பாஜகவுக்கு ‘ஒரு’ ஓட்டு போட்டால் ‘இரண்டாக’ பதிவு : பதறிய எதிர்க்கட்சிகள்.. நீதிமன்றம் ACTION!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2024, 1:54 pm
பாஜகவுக்கு ‘ஒரு; ஓட்டு போட்டால் ‘இரண்டாக’ பதிவு : பதறிய எதிர்க்கட்சிகள்.. நீதிமன்றம் ACTION!
கேரளா மாநிலம் காசர்கோடு சட்டசபை தொகுதியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதில் பா.ஜ.க,வுக்கான பொத்தானை ஒரு முறை அழுத்தினால் அக்கட்சிக்கு இரண்டு ஓட்டுகள் விழுந்ததாக கூறப்படுகிறது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், விவிபாட் ஒப்புகைச்சீட்டையும் சரி பார்த்தபோது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.கவுக்கு கூடுதல் ஓட்டுகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது.
4 இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. இதனையடுத்து ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும், விவிபாட்டில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் படிக்க: வாங்கிக்கோ துட்டு… போடுங்க திமுகவுக்கு ஓட்டு : தருமபுரியில் இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா.. ஷாக் Video!!
இதனை விசாரித்த நீதிபதிகள், ‘தேர்தல் நடவடிக்கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும்’ எனக் கூறியதுடன், ‘ஒப்புகை சீட்டு இயந்திரம் எப்படி செயல்படுகிறது? அதில் முறைகேடு செய்ய முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விசாரித்து பதிலளிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.