பிரச்சனைக்கு காரணமான துண்டு… வாக்குச்சாவடியில் பாஜக – காங்கிரஸ் கட்சியினர் மோதல்… விரட்டி அடித்த போலீசார்..!!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 7:15 pm

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில், தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இந்த நிலையில், ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக முன்னாள் அமைச்சர் கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் வந்தார். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், வாக்களிக்க வரும் பொழுது காங்கிரஸ் துண்டுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்தார்.

மேலும் படிக்க: இறந்தவருக்கு ஓட்டு இருக்கு… உயிரோட இருக்கும் மனைவிக்கு ஓட்டு இல்ல… மறுதேர்தல் அவசியம் ; அண்ணாமலை

அப்போது, அங்கிருந்த பாஜக முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் காங்கிரஸ் துண்டை போட்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கழுத்தில் இருந்த துண்டை எடுக்க மறுத்ததால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றும் தொடர்ந்து இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனை அடுத்து, வாக்குப்பதிவு மையத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1413

    0

    0