கடைசி நேரத்தில் திடீர் டுவிஸ்ட்.. கோவையில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 April 2024, 8:19 am

நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது.

2024 மக்களவைத் தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் 2,059 வாக்குச்சாவடிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு சதவிகிதம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு… தேர்தல் விதிமுறைகளில் திடீர் தளர்வு… தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

அதன்படி, கோவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 64.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சட்டமன்ற தொகுதிகள் விவரங்களின்படி சூலூர் சட்டமன்ற தொகுதியில் 75.33%, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 66.42%, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 58.74%, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 59.25%, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 59.33%, பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கோவை தொகுதியில் 71.17% வாக்கு பதிவானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 64.42% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 431

    0

    0