வார இறுதியில் சற்று ஆறுதல்… இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 April 2024, 10:26 am

வார இறுதியில் சற்று ஆறுதல்… இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை தெரியுமா..?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்த ஆபரணத்தங்கத்தின் விலை, நேற்று மட்டும் ரூ.440 உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று சற்று குறைந்து காணப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.40 சரிந்து ஒரு சவரன் ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலத் தொடக்கம் ; விண்ணைப் பிளந்த பக்தர்களின் கோஷம்..!!

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.90.00-க்கும், ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…