AI இல்லை.. ஃபஹத் பாசில் போலவே இருக்கும் நபர்.. – அச்சு அசல் அப்படியே இருக்காரே பா..!(வீடியோ)

Author: Vignesh
20 April 2024, 11:54 am

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

மேலும் படிக்க: போதை ஊசி போட்டுக்கிட்டு ஷூட்டிங் வந்த கவர்ச்சி நடிகை.. பயில்வான் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆவேசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி சில நாட்களிலேயே ரூபாய் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Fahadh Faasil

மேலும் படிக்க: தப்பு தப்பா பேசாதீங்க.. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு- ஓபனாக பேசிய ஜாக்குலின்..!

இந்நிலையில், இவரை போல் இருக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறாராம்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?