வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தினாலே இப்படித்தான்… தேர்தல் அதிகாரியிடம் பாஜக வேட்பாளர் தமிழிசை மனு…!!
Author: Babu Lakshmanan20 April 2024, 1:03 pm
வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான் என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் அலுவலரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்டுகளை தாக்கி, வெளியே அனுப்பி விட்டு, கள்ள ஓட்டுகளை திமுகவினர் போட்டுள்ளதாகவும், 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேனாம்பேட்டை கணபதி காலனியில் பூத் ஏஜெண்டுகளை வெளியே அனுப்பி விட்டு, திமுகவினர் கள்ள ஓட்டுகளை போட்டுள்ளனர். பூத் ஏஜெண்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம். தேர்தலுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்வதில் எந்தவித பயனும் இல்லை.
மேலும் படிக்க: கவனக்குறைவு வேண்டாம்… ஜுன் 4 வரை எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம் ; கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்
பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இல்லை என்பது மிகவும் வலி நிறைந்தது. வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 சதவீத வாக்குகளை பதிவு செய்யலாம், என்று கூறினார்.