ஒரு மாதமாக தங்கி தேர்தல் வேலை பார்த்த துணை ராணுவப் படைக்கு NON VEG விருந்து : திக்குமுக்காட வைத்த போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
20 April 2024, 9:51 pm

ஒரு மாதமாக தங்கி தேர்தல் வேலை பார்த்த துணை ராணுவப் படைக்கு NON VEG விருந்து : திக்குமுக்காட வைத்த போலீசார்!

நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: திருவேற்காடு கோவில் கருவறை அருகே பணியாளர்கள் அட்ராசிட்டீஸ்.. REELS அவதாரம் : காத்திருந்த ஷாக்!

இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…